காதல் வலி 66

அற்றைத் திங்கள் வெண்ணிலவில்

அவளைக் கண்டேன்

அவள்
திங்கள் அன்று
பிறந்த திங்கள்

செவ்வாய் மலர்ந்து
பூமியில் வாழும் செவ்வாய்

அவள்
அற்பனாய் இருந்த
என்னை அற்புதனாய்
மாற்றிய புதன்

என் பூமி நெஞ்சைத்
தாக்க வரும் வியாழன்

அவள்
கொலுசுகள் வெள்ளி
என் வாழ்வில்
வந்த விடி வெள்ளி

அவள் கனி
அவளை காணும்
இளைஞனுக்குப் பிடிப்பது சனி

அவள்
மாலையில் மறையாது
மாலையிட்டவனோடு மறைந்த
ஞாயிறு

கவிஞர் புதுவை குமார்

எழுதியவர் : புதுவை குமார் (3-Feb-19, 10:41 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 113

மேலே