காதல் உணவு
சமையலறை மந்திரங்களை
சாமார்தியமாக செய்து ,
சந்தோசபடுத்தி - உன்
சமயலை மேலும் சுவையாக்கி
எம் பசி தனிக்க வேண்டுமடி... *உயிரே*
பாத்திரங்களை
சுத்தம் செய்து - உன்
சுமை வேலைகளை
சுகமாக்க வேண்டுமடி..... *உயிரே*
காய்கறிகளை - நீ
நறுக்கும் போது- உன்னை
பின்னால் அணைத்தபடி - கைகள் உன் கையோடு
உரசி உதவி மகிழ வேண்டுமடி... *உயிரே*
அறுசுவையை
உன் மனதார
ஆகாரமாக்கி - உனக்கு
ஊட்டி மகிழ வேண்டும்... *உயிரே*
ஒரு தட்டில் -நம்
இருவரின் விரல் உரசலோடு
ஆகார பறிமாற்றம்
ஆனந்தமாய் அமைய வேண்டுமடி... *உயிரே*
உன் இதழ்களில்
ஒட்டிய சோறுகளை -என்
இதழ் கொண்டு
மென்றெடுக்க வேண்டுமடி..... *உயிரே*
உன் ஐ விரல்களை
ஒவ்வொன்றாக சூப்பி
சமிபாட்டை சீராக்க வேண்டுமடி.... *உயிரே*
இத்தனையும் ,
இதனைவிடவும் செய்து
என் உயிரின் மனதை
இன்பபடுத்த வேண்டுமடி.... *உயிரே*