மனத் தென்றலே மார்கழி நீ

இயற்கை எனினும் இறைவன் எனினும்
செயற்கை தழுவாத என்னவ ளாய்நீ
கயற்கண் மொழிசொல் வதுஎன்ன வென்று
இயற்றமிழே நீசொல் லடி !

முத்தேநீ ஓடிவா முத்தமொன்று தந்திடுவேன்
வெட்கப் படாமல்நீ வா

ஓபூங் கொடிபுன்ன கைப்பூங் கிளிமனத்
தென்றலே மார்கழி நீ

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-19, 11:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே