ஓரக்கண் பார்வையிலே
![](https://eluthu.com/images/loading.gif)
உன் இமைகள் துடிப்பதற்கும்
என் இதயம் துடிப்பதற்கும்
என்ன சம்மந்தமடி பெண்ணே..
நீ நேராக பார்க்கையிலே
சீராக துடிக்கும் என்னிதயம்
உன் ஓரக்கண் பார்வையிலே
ஒரு கணம் நின்று போனதே...
என்னை கொல்லாமல்
கொல்லும் உன் இடையிலே
கல்லான என் மனசு கூட
கரைந்து நிலை தடுமாறுதே...
நானில்லாமல் நீ இல்லை
நீ இல்லாமல் நானில்லை
என்ற நிலை சொல்லாமல்
வந்து விட்டதடி சொந்தமே..
வீம்புக்கு மாவிடிக்காமல்
ஏங்கும் என்னை புரிந்து கொள்...
பூ வை தாங்கும் காம்பு போல
பூவை உனை தாங்குவேன் கண்ணே..