முட்டாள்கள் சிறுகதை

வழிப்போக்கனும் நான்கு முட்டாள்களும்
ஒருநாள் முட்டாள்கள் ஓன்று சேர்ந்து தொலைதூரம் செல்வதற்கு முடிவெடுத்தார்கள்
அப்படி செல்லும் வழியில் ஒரு ஆறு ஓடை போல் விடாது ஓடிக் கொண்டிருந்தது
இவர்கள் ஆற்றை பார்த்ததும் பயந்து எப்படி இதைக் கடந்து செல்வது என்று யோசித்தார்கள் ஆனால் ஆறு விடாது ஓடிக் கொண்டிருந்தது . இவர்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது , கொஞ்ச நேரம் நாம் ஓய்வெடுத்து வந்தால் ஆறு அமைதியாகிவிடும் , அதன்பின் நாம் ஆற்றை இலகுவாக கடந்து விடலாம் என்று யோசித்தார்கள் , நான்கு முட்டாள்களும் ஓரிடத்தில் ஒய்வெடுத்தார்கள், பின் ஒரு முட்டாளை அனுப்பி ஆறு உறங்கி விட்டதா என்று பார்த்து வா என்று அனுப்பினர் ,அவன் போய் பார்க்கும் போது ஆறு ஓடிக் கொண்டே இருந்தது , அவன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து ஆறு இன்னும் தூங்கவில்லை என்றான் . சிறிது நேரம் செல்ல இன்னொரு முட்டாளை அனுப்பினர் , அவனும் அப்படியே ஓடி வந்தான் , இப்படியே நான்கு பேரும் பார்த்து பயந்து எப்படி நாங்கள் ஆற்றைக் கடப்பது என யோசித்து கொண்டிருக்கையில் அவ்வழியே வழிப்போக்கன் ஒருவன் வந்தான் , அவன் இவர்களை பார்த்து ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் என்னுடன் வாருங்கள் நான் உங்களை பத்திரமாக கூட்டி செல்கிறேன் என்றான் .முட்டாள்களும் அவனை நம்பி ஆற்றில் இறங்கி ஆற்றைக் கடந்தனர் , ஆனாலும் அவர்கள் பயம் தெளியவில்லை நாங்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றோமா என்று எண்ணி பார்த்தனர் , ஒவ்வொருவரும் எண்ணும் போதும் தன்னை தான் எண்ணாது எண்ணினர், அப்படி எண்ணும் போது ஒருவரைக் காணவில்லை, இதை பார்த்த வழிப்போக்கன் இப்ப நான் உங்கள் ஒவ்வொருவர் பெயரை சொல்லி உங்களை அடிப்பேன் நீங்கள் உங்கள் பெயரை சத்தமாக சொல்லி
உட்காரவும் என்றான் , அப்படியே ஒவ்வொருவர் பெயரும் முறையாக சொல்லி அடித்தான், இப்போது நீங்கள் நான்கு பேரும் இருக்கிறீர்கள் அல்லவா என்றான் , அந்த முட்டாள்களும் ஆமா ஐயா என்றனர் ,
முட்டாள்களின் தப்பினை உணர வைத்து அவர்களை வழியனுப்பி வைத்தான் வழிப்போக்கன் ,

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Feb-19, 1:15 pm)
பார்வை : 453

மேலே