அகிலன் குட்டி கதை

முற்றுப்புள்ளி
?! .

"நான்தான் எல்லாருடைய மனதிலும் தேடலை உருவாக்குகிறேன்"
நான்தான் பெரியவன் என்று சொன்னது வினாக்குறி,
"நீ தேடலை மட்டும்தான் தொடங்குகிறாய் நான் ஒவ்வொரு தேடலிலும் நிகழும் அதிசயங்களை வெளியில் கொண்டுவருகிறேன் "
நான்தான் பெரியவன் என்று சொன்னது ஆச்சரியக்குறி.
வினாக்குறியும் ஆச்சரியக்குறியும் பேசியதே பார்த்த முற்றுப்புள்ளி எதுவும் பேசாமல் சென்று தொலைவில் அமர்ந்தது

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (3-Feb-19, 4:51 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 246

மேலே