கார்மேகம் போல் காதல் பொழியும்

கறுப்பிற்கு உவமை கருவிழியா
அன்றி கார்மேகமா
மனமேடையில் ஓர் பட்டி மன்றம் !
கார்மேகம் போல் காதல் பொழியும்
கருவிழியே அதன் உவமை என்பதை
சொல்லாமல் சொல்வது போல்
பூவிழிகள் மலர புன்னகைஇதழ் விரிய
நீ மௌனமாய் வந்து நின்றாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Feb-19, 9:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே