கால் கொலுசு கவிதையே

கவிதையாய் உன்

கால் கொலுசு
ஒலி

தொடர் கீதமிசைக்க
தொலையும்

தூங்கா இரவு
தொடர்கதையாய்

மண நோயின்
அறிகுறியாம்

மணப்பெண் தான்
மருந்தாம்

மணப்பெண்ணாய்
வருவாயா

என் கால்கொலுசு
கவிதையே?

எழுதியவர் : நா.சேகர் (8-Feb-19, 10:31 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 372

மேலே