கவிதை
காதல் என்ற மூன்றெழுத்து
காமம் என்ற மூன்றெழுத்தில்...
தோற்கின்றது.....
கவிதைகளில்....
புது உயிரின் உயிர் துடிப்பாய்...
கேசம் கோதும் விரல்களாய்...
மயிலிரகின் வருடலாய்...
உணர்வுகளின் உடைந்த பிராவகமாய்....
உன்னை நான் வென்றிட முயன்றிட...
நீ என்னை வென்றிட முயன்றிட...
முற்றும் துறந்த...
மோன நிலை...
மௌன வெள்ளத்தின் படையெடுப்பில்..
நிசப்தங்கள் நீண்டு விட...
விடியாத இரவொன்று..
விளக்கொளி கெஞ்ச..
உன் பரிசங்கள்...
பரிசுகளை வதனத்தில் வாரி இறைக்க...
வசந்த விழா...
தென்றல் திணற...
ஈருடல் ஓர் உடலாக
வியர்வையில் குளிக்க...
குங்குமம் மங்களம் பாட...- என்
உடல் மஞ்சளெல்லாம்...
மஞ்சம் நனைக்க...
கவிதையாகிய நான்...
உன் காமத்தில் தோற்றுத்தான் போகின்றேன்...