இழந்த இளமை எதிர் வருமோ

பெருத்த பணத்தன் பிணமாய் ஆனால்
சேர்த்த பணமெல்லாம் புதையுமோ
வெளுத்த தலையில் கரு வண்ணம் பூசின்
இழந்த இளமை எதிர் வருமோ
அதிர்ந்து பேசி அரட்டினாலும்
ஆற்று வெள்ளம் வடியுமோ
அக்கரை இன்றி நடந்தாலும்
அன்றைய நாள் தான் நிற்குமோ
அவ்வாறான அனைத்தையும் நாம்
அகற்ற நினைத்தாலும் துவளவோம் - ஆனால்
அழகு கல்வியை கற்க நினைப்பின்
அனைத்து வயதிலும் வெல்லலாம்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-Feb-19, 9:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1380

மேலே