காதல்
காதல்!!
ஓர் அற்புத உணர்வு,
சிறகில்லாமல் மனம் பறக்கும்
சிறையில்லாமல் அடைத்து வைக்கும்..
முட்டாளை,முரடனை,
மேதையையும் கூட
தடுமாறி
தடம் மாற வைக்கும்..
கலியுக மனிதர்கள் மட்டுமல்ல,
கடவுளாய் இருந்த பலரும்
காதல் வயப்பட்டவரே..
காதலில் விழுந்தவன்,
மோசமான தவறுகள்
செய்வதில்லை
என
என் சிற்றறிவு சொல்கிறது..
ஆகவே,
காதல் கொள்வோம்
எவர் மீதாவது
அல்லது
எதன் மீதாவது.