நிலா ப்ரியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நிலா ப்ரியன்
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jan-2019
பார்த்தவர்கள்:  371
புள்ளி:  46

என்னைப் பற்றி...

இயற்பெயர் எழில்,பூர்வீகம் தென் மாவட்டமென்றாலும் பிறந்து,வளர்ந்ததெல்லாம் கோவை மாவட்டமே.மேல் நிலை படிப்பு வரை வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பிரிவு,கணக்கியலின் மேல் கொண்ட ஆர்வத்தினால் ஒரு வருடம் திருப்பூரில் ஆடிட்டர் அலுவலகத்தில் பணிக்குப்பின் மீண்டும் தபால் வழிக்கல்வி மூலம் B.com படிப்பை நிறைவு செய்யாமலே இன்று வரை.தமிழ் மேல் கொண்ட ஆர்வம் எழுதத்தூண்டியதால்,கிறுக்க ஆரம்பித்தது.. rnகவிதையாகுமென்ற ஆர்வத்தில் கிறுக்கிக்கொண்டே இருக்கிறேன்.

என் படைப்புகள்
நிலா ப்ரியன் செய்திகள்
நிலா ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2019 7:51 pm

எல்லாம்
இழந்த நிலையில் எதையோ
பற்றிக்
கொள்வதாயில்லாமல்,
உனையே
பற்றிக்கொள்ள..
எதையும்
இழக்கும்
நிலையிலிருக்கிறேன்.

மேலும்

நிலா ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2019 7:48 pm

பெருமழைக்காய்
காத்திருக்கும்
நேரத்தில் வரும்,
சிறு தூரலாய்
நீயும்,
உன்
அருகாமையும்.

மேலும்

நிலா ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2019 7:47 pm

சில நேரங்களில்
உனக்கும்
எனக்குமான
மௌனம் சூழ்ந்த
இடைவெளியில்,
கொட்டிக்கிடக்கும்
வார்த்தைகளை
பொறுக்கிடுத்து,
கோர்த்து,
வரிகளாக்கி..
கவிதையென்று
கூறிக்கொள்கிறேன்.

மேலும்

நிலா ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2019 10:58 pm

இறுக மூடிய
இதழ்களுக்கும்
சேர்த்து பேசியும்,
குறைவதாயில்லை..
குமைந்த மனதில்
குவிந்து கிடக்கும்
வார்த்தைகள்.

மேலும்

நிலா ப்ரியன் - நிலா ப்ரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2019 8:23 pm

இயல்பாயிருக்கையில்
அவ்வப்போது
வந்து போகும்
உன்
நினைவுகள்,
இடைவெளியின் போது
மட்டும்
இருக்கையிட்டு
அமர்ந்து கொள்கிறது..
கொஞ்சம்
இம்சை கொடுத்தபடியே.

மேலும்

நன்றிகள் சகோ 21-Feb-2019 12:20 am
Thank u 21-Feb-2019 12:18 am
arumai 20-Feb-2019 10:32 am
அருமையான வரிகள் 20-Feb-2019 10:23 am
நிலா ப்ரியன் - நிலா ப்ரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2019 11:56 am

சிக்கிமுக்கி கற்களின்
சிறுவடிவமோ..
நாம்
பற்றிக்கொண்டதால்,
பற்றியெரியும்..
நம்
சிற்றிதழ்கள்.

மேலும்

நல்ல கற்பனை .. முத்தம் உண்ணும் காதல் ... 21-Jan-2019 11:19 am
அதே தோழர் 21-Jan-2019 9:01 am
மின்சார முத்தமோ ! 21-Jan-2019 5:31 am
முத்தம் முத்தம் முத்தமென்றே அங்குள ஒவ்வொன்றும் இதழ்குவித்து நின்றன. காமம் எரியும் காதல் முத்தம். 21-Jan-2019 5:29 am
நிலா ப்ரியன் - நிலா ப்ரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2019 9:08 am

என்னுள் நுழைந்தஉன்னை..சகிக்கவும் முடியாமல்,எடுக்கவும் முடியாமல்..இருதலை கொள்ளி எறும்பாய்..நான்.

மேலும்

நன்றிகள் 20-Jan-2019 12:45 am
அருமையான குறுங்கவிதை .. 19-Jan-2019 10:34 am
நிலா ப்ரியன் - priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2019 9:57 pm

அருகினில் இருந்தும் தொலைவினில் தொலைந்தாய்.... தொலைவினில் இருந்து கனவினில் கரைகிறாய்.. ஆயிரமாயிரம் வார்த்தைகள் பரிமாறி மனங்கள் விழாக்கோலம் கண்ட நாட்கள் இங்கே காட்சி படுத்தப்படுகின்றன நினைவுகளினூடே...கானல் நீரின் பிரதிபலிப்புகள் மனதின் வலிக்கு மருந்தாய் இங்கே...வலிகள் இன்று விழிகளின் பிம்பம்மாய்..ஒற்றை புன்னகையோடு மௌனமொழி பேச காத்திருக்கிறேன்....

மேலும்

நன்றி 26-Jan-2019 10:51 am
அருமை ... 26-Jan-2019 9:50 am
நன்றி 25-Jan-2019 9:56 pm
நன்றி 25-Jan-2019 9:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே