இரவுகள்

இரவுகள் என்றதும்
நினைவிற்கு வருவது . . .

உறக்கம் தொலைத்து
உலா வரும் நிலா

அந்தரத்தில் தொங்கும்
விண்மீன்கள்

கண் மை அள்ளி
உடலெங்கும் பூசி கொண்ட வானம்

அத்து மீறி ஆடைக்குள் நுழையும்
தென்றல்

அடிக்கடி தற்கொலைக்கு முயலும்
மின்வெட்டு

தூரத்தில் கேட்கும்
இரயிலின் சப்தம்

யாருக்கும் தெரியாமல்
வந்து போகும் கடவுள்

இத்துடன்
விழிகளுக்கும் இமைகளுக்கும்
நின்றபடி
என் உறக்கத்தை கொலை செய்து கொண்டிருக்கும் உன் நினைவு

என் இதயத்தை களவாடிய
குற்ற உணர்வு இல்லாமல்
உறங்கும் நீ

இரவுகள் கருமையால் மட்டுமல்ல
கனவுகளாலும்
வண்ணங்களாலும் ஆனதுதான்

எழுதியவர் : ந.சத்யா (17-Feb-19, 1:23 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : iravugal
பார்வை : 179

மேலே