காதல் ஒரு

காதல் ஒரு....
======================================ருத்ரா

ஈடன் தோட்டம் எனும்
ஈசல்களின் தோட்டம்.


நழுவி ஓடும்
மேக மண்டலம்.
உடுத்தும் முன்
உரிந்து விழுமோ?


சூத்திரங்களே இல்லாத‌
ஒரு புவி ஈர்ப்பு.
நியூட்டன்கள் முட்டாள்கள்
ஆனார்கள்.


இருளும் ஒளியும்
கை குலுக்குவது போல்
கை கழுவிக்கொள்ளும் அந்தி.


உமர்கய்யாம் கவிதை.
மரணத்தை இனிமை என்று
மொழிபெயர்க்கும் ஜனனம்.


"சலவை"க்கல்லில்
மரணத்தால்
"துவைக்கப்பட்ட"போது
அது தாஜ்மஹால்.


ஒரு ஆரண்யகாண்டம்.
சிணுங்கல்களின்
சீறல்களே மாயமான்கள்.


=================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (17-Feb-19, 3:39 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kaadhal oru
பார்வை : 95

மேலே