இலங்கையில்உள்ள ஊரைப் பற்றி யாவரும் அறிவீர் 1
(மட்டக்களப்பு கல்லடிப் பாலம்)
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமாம் திருகோணமலைக்கு அடுத்து உள்ள வரலாறு உள்ள பெரும் நகரம் மட்டக்களப்பு. கொழும்பில் இருந்து A11 பெரும்பாதையில் 318 கி மீ தொலைவில் உள்ள தமிழர், சிங்களவர்கள், முஸ்லீம்கள், பறங்கியர் வாழும் நகரம். ஓலைந்தர் கட்டய கோட்டையும் ஒன்று உண்டு .
இந்த நகரத்திற்கு போர்த்துகேயர் ஆங்கிலத்தில் Batticaloa எனப் பெயர் அளித்தனர். ஓரு காலத்தில் அயோத்தியில் இருந்து இந்தப் பகுதிக்கு வந்த முக்குகர் தமது படகில் இந்த ஏரியில் சென்ற போது மணல் உள்ள முனை ஓன்று தென் பட்டதினால் அவ்விடத்துக்கு “மண்முனை” எனப் பெயரிட்டனர். மேலும் தொடர்ந்து தேற்கு நோக்கிச் சென்ற போது சிறு தூரத்துக்கு மேல் சதுப்பு நிலமாகத் தட்டையாக இருந்ததால் படகு செல்ல முடியாது நின்றது . இது மட்டுமே இந்த களப்பு (ஏரி) என்று சொல்லி அவ்வூருக்கு மட்டக்களப்பு எனப் பெயரிட்டு அழைத்தனர் என்று தனது மட்டக்களப்பு மான்மியம் என்ற நூலில் மறைந்த பண்டிதர் F X C Nadarajah அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
திமிலர் என்பவர்கள் சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்த மீனவர்கள் குடிகள் ஆவர். திமில் என்பது சங்க காத்து தமிழர் பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இக்கலத்தை ஓட்டியவர்கள் திமிலர்கள். இவர்களும் அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்
அந்தப் பகுதியில் முக்குகருக்கும் துமிலருக்கும் அடிக்கடி தொழில் காணமாகச் சண்டை நடந்தது, அதனால் ஏராவூர் , வந்தாறுமூலை போன்ற ஊர் பெயர்கள் தோன்றக் காரணமாக இருந்தன
பாடும் மீன் என்றவுடன் எல்லோருக்கும் மட்டக்களப்பு நகரம் தான் நினைவுக்கு வரும். பாடும் மீனோடு தொடர்பு உள்ளது கல்லடிப் பாலம். கோட்டையின் அருகே அமைந்திருக்கும், கல்லடி பகுதியில் உள்ள லேடி மானிங் பாலம், நகரின் காலனித்துவ காலத்திலிருந்தே எஞ்சியிருக்கிறது. 1924 ஆம் ஆண்டில் இந்த பாலம் கட்டப்பட்டது, அப்போது இலங்கையின் கவர்னராக இருந்த ப்ரிகேடியர் ஜெனரல் சேர் வில்லியம் மானிங் என்பவர் அவரின் மனைவியின் நினைவாகக் கட்டப் பட்ட இந்தப் பாலம் 288மீட்டர் நீளமும் 14மீட்டர் அகலமும் உள்ளது. இலங்கையின் பழமையான மற்றும் மிக நீண்ட இரும்பு பாலத்துக்கு அருகே, மார்ச் 2013 யில் ஜப்பானியரின் உதவியோடு கட்டப்பட்ட ஒரு புதுப் பாலம் உண்டு.
.
மட்டக்களப்பில் புகழ்பெற்ற நாட்டுப் பாடல்களை கேட்க ஒரு சிறந்த இடமாகக் கல்லடி பாலம் அறியப்படுகிறது. பூரணச் சந்திரன் காலத்தில், காதிணை கூர்மையாக வைத்திருந்தால் கல்லடிப் பாலத்துக்கு கீழே உள்ள ஏரி நீருக்கடியில் இருந்து சிம்பொனி கேட்கும் என்று சொல்வார்கள். Mr.Stanly Green என்பவர் இவ் ஓசையானது செலோ (cello )என்னும் இசை உபகரணத்தின் இராகத்தை ஒத்ததாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Rev Fr. Lange என்பவர் இவ் ஓசையை ஈக்கள், வண்டுகளின் ரீங்காரம் மற்றும் தாழ் சுருதியில் எழுப்பப்படும் தவளையின் முணுமுணுப்பை போன்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இங்கு முக்கிய கேள்வி இச் சத்தத்தை எழுப்புவது எது என்பதாகும். சிலர் இது மீன்களால் நிகழ்வதாக நம்பினார்கள். ஆராய்ச்சியாளர்கள் வாவியின் அடிப் பரப்பில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒன்று கூடி சத்தத்தை உருவாக்குவதாக கூறுகின்றனர். ஆனால் இங்கு எழுப்பப்படும் சத்தத்தின் இசைத்தரம் கேள்விக்குரியதாக உள்ளது.
இச் சத்தங்கள் பல வகைக்குரியதாக உள்ளது. அதாவது பொப் சத்தம், கிளிக் சத்தம், விசில் சத்தம், உறுமல் சத்தம், முனகல் சத்தம் , முணுமுணுப்புசத்தம், ரீங்காரசத்தம் போன்றவற்றை கொண்டதாக உள்ளது.
மீன்களானது தமது துணையைக் கவர்வதற்காகவும், ஆபத்தை அறிவிப்பதற்காகவும், எதிரியை பயமுறுத்துவதற்காகவும் சத்தத்தை எழுப்பகின்றன என்பது ஒரு விளக்கம்.
நீந்தும் மீன்களில் உள்ள சிறு நீர் பையானது பல மீன்களில் ஒலி எழுப்பக் காரணமாகும். அனேகமான மீன்களில் இப் பையானது காற்றினால் நிரப்பப்பட்டு வயிற்றுக் குழியினுள் அமைந்துள்ளது.
குடம்பிகளும், முட்டைகளும் செறிந்த அதிகமாக உணவு கிடைக்கும் பகுதிகளில் மீன்கள் ஒன்று சேரும். அங்கு தொடர் பாடலுக்காக ஒலி எழுப்புகின்றன. விசேடமாக இரவு நேரத்தில் நீரானது இருண்டதாகவும் தெளிவு குறைவானதாகவும் உள்ள போது ஒலி எழுப்பப்படுகின்றது
.கடற்கன்னியோடு தொடர்படுத்தி தன் காதலனைத் தேடி முழு நிலவுக் காலத்தில் பாடுவதாகப் பல புனைவுக் கதைகள் உண்டு. கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கும், நாட்டுக் கூத்துக்கும் மட்டக்களப்பு பகுதி பிரசித்தமானது.
****