மதியாதவர் பின் செல்வதை விட செத்தொழிதல் பெரிது பாமக பெண் பிரமுகரின் போர்க் குறள்
மதிக்காதவங்க பின்னாடி இப்படி கூட்டணி வைச்சு போகணுமா என்கிற கேள்வியை பாமக பெண் பிரமுகர் ஒருவரே திருக்குறள் மூலம் கேள்வி எழுப்பி உள்ளது வைரலாகி வருகிறது. கடந்த 2 மாதமாகவே அரசல்புரசலாக தகவல்கள் வந்தாலும், இப்படி திடுதிப்பென்று நேற்று அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டதால், பாமகவிற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்தே விலகி உள்ளார். இது சம்பந்தமான பகிரங்க அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூட்டணி அதிருப்தி தருவதாகவும், விரைவில் செய்தியாளர்களை சந்தித்து தன் நிலைப்பாட்டை சொல்வதாகவும் தெரிவித்திருக்கிறார். ராஜேஸ்வரி பிரியா கூடவே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த கூட்டணி பிடிக்கவில்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இதில் ஸ்பெஷல் என்னவென்றால், பொன்மொழிகளுடன் பதிவுகள் போடுவது டாக்டர் ராமதாஸ் பாணி என்றால், அதேபோல ராஜேஸ்வரி பிரியாவும் திருக்குறள் ஒன்றினை பதிவிட்டுள்ளார் திருக்குறள் "ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று" என்ற குறள்தான் அது. திருக்குறளில் 967-வது குறள் ஆகும். இதற்கு இரண்டு மூன்று அர்த்தங்கள் உள்ளன. செத்தொழிதல் மேல் மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, செத்தொழிதல் எவ்வளவோ மேல் என்று ஒரு அர்த்தம் உள்ளது. மற்றொன்று, இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம். இன்னொன்று, நம்மை மதியாதவரின் பின்சென்று இன்பமாக வாழ்வ`
ஹேமவந்தனா