காதல்

முற்றத்தில் அவன் வரவிற்காக
வந்து காத்திருந்தேன் நான்
சிறு தூறல் வந்தது
முத்து முத்தாய் மழைத்துளிகள்
மண்ணை நினைக்க
என் நினைவு நேற்று அவன்
கன்னத்தை நனைத்த
முத்தத்துளிகளை நினைவுபடுத்த
அவன் இன்னும் வாராதது
என்னவோ செய்ததே என் நெஞ்சை
இதை எப்படி கூறுவெனடி உன்னிடம்
என்னுயிர்த் தோழியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Feb-19, 10:08 pm)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே