ஏன் ஒழியவில்லை
வெள்ளம் பாதித்த
வீதிபோல
வழியேதும் தெரியாம
வறுமையில் வாடி
வேதனையுற்றபோதும்
கைவிட மாட்டானென
கடவுளை நம்பினேன்—அவனோ
காலனை ஏவிவிட்டு
கைபிடித்தவளை பறித்து
கண்ணீர் விட வைத்தபோதும்
சிசு ஒன்று தந்து
சோதித்தாயே
பசியா, பிள்ளையா
பாரம் சுமக்க முடியாம
பரிதவித்தபோதும்
களங்கமில்லாம
காலமுழுதும் வாழ்ந்தேனே
கண்ட பலன் என்ன?
மாதவனே உனக்குக்கூட
மனசாட்சி இல்லையோ!
காட்டுச் செடிபோல
கண்டபடி மண்டிகிடக்கும்
விடை தெரியா வினாக்கள்
வருடங்கள் பலநூறு கடந்தும்
வறுமை ஏன் ஒழியவில்லை?