என்னவள் சிரிப்பு
வான்முகிலின் இதழ்கள்
மலர்ந்து விரிய -ஆங்கு
முத்தச்சரம்போல் பிறை
நிலா பல்வரிசையாய்
சிரிக்கும் நிலவாய்க் காட்சிதர
என்னெதிரே என்னவள் அதே
நிலவின் காட்சிதந்தாள் எனக்கு
சிரிக்கும் பிறை நிலவுப்பெண்ணாய்