காதலர் தின கொள்கைகள்

ரோஜாக் கடை
வாழும் ரோஜாக்களே
கொஞ்சம்
நலமாக இருந்து கொள்ளுங்கள்
காதலர்கள் வரப்போகிறார்கள்..
கடற்கரை மணல்களே
இன்று உங்களுக்கு தேர்தல்
கவனமாக இருங்கள்
அதிகம் கள்ள ஓட்டுகள் விழழாம்..
கைபேசிகளில்
வாழும் கால் பட்டன்களே
பாவம் நீங்கள்
உங்கள் வாழ்க்கை இன்று
அதிகம் தேயப் போகிறது..
மோட்டர் பைக்கின்
ஆக்சிலேட்டர்களே - ஸ்பீட்
பேரேக்கர்களை சிரமமாக
எண்ணாதீர்கள்
அவர்களுக்கு ஆனந்தமே
அது போதும் போதும்…..
பொய்களே சற்று பொட்டலம்
கட்டி வையுங்கள்
ரூபாய்க்கு நிறைய விற்று தீருமாம்..
முத்தங்களே மிக கவனம்
உதடுகளும் கன்னங்களும்
மனதிடம் சாக்கு சொல்ல கூடாது..
கண்களே
இவர்கள் அன்பை பரிமாறுகிறார்கள்
இமைகள் எதற்கு
குறுக்கே..
உலகமே இன்று ஒருநாள்
குரைக்காமல் இருங்கள்
காதலை அவர்கள் அலங்கரிகட்டும்…

இன்று காதலர் தினம்………

எழுதியவர் : ச.மணிகண்டன் (22-Feb-19, 2:49 pm)
சேர்த்தது : manikandan
பார்வை : 52

மேலே