தாய் மொழி தினத் தமிழ் வாழ்த்து

திக்கெட்டும் ஒலிக்கும் மொழியழகு,
திகழ் பரப்பும் சொல்லழகு,
புகழ் நிறைக்கும் வரியழகு,
மூத்த குடி கண்ட பிறப்பழகு,
மூவாத சீரிளமை வனப்பழகு,
எண்ணிலடங்கா பெயர், பெருமையோடு,
சொல்லிலடங்கா மாயோன் முருகன் தந்த,
மூத்த மொழி என்ற பெயரழகு,
கல்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மொழியாம்,
எங்கள் தமிழ் மொழியே வாழிய, வாழியவே!

எழுதியவர் : arsm1952 (22-Feb-19, 7:27 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 1830

மேலே