ஆசை
ஆசை
ஆசைப்பட்டேன் ஆசைப்பட்டேன் !
அத்தனைக்கும் ஆசைப்பட்டேன் !
ஆண்டவனை வேண்டிக்குறேன்
அத்தனையும் நடக்கத்தான்
காட்டாத்து வெள்ளமென
ஓடுதம்மா ஆசையுந்தான்
கரைபுரளாம காக்கத்தான்
வேண்டுகிறேன் ஆண்டவனை
தரணித்தாயின் நிர்வணங்கண்டு
தாங்காத ஏக்கங்கொண்டு
தாயவளின் மானங்காக்க
மரம் நட ஆசைப்பட்டேன்
மரம் வெட்டும் மனிதரின்
சிரமறுக்க ஆசைப்பட்டேன் !
மண் குளிர மழை வேண்டி
மாதவரும் ஏங்கிடவே
மேகத்தைப் பிழிந்து
மழை தர ஆசைப்பட்டேன்
ஆள்துளையிட்டு பூமியை
வேரறுக்கும் கொடுமையை
வேரறுக்க ஆசைப்பட்டேன் !
ஆழித்தாயின் மனமதில்
இன்பங்களைத் தந்திடவே
ஆறாத்துயர் ஆழிப் புயலை
அழிக்க ஆசைப்பட்டேன்
அகிலமே ஆனந்தமாய்
நீ உறங்க வேண்டியே
அலைக்கடலின் சினத்தை
அடக்கியாள ஆசைப்பட்டேன்!
செயற்கைக்கோளை ஏவித்தான்
செவ்வாயிலும் குப்பையிட்டோம்
செங்காட்டு வளமெல்லாம்
சீரழித்த பாவியானோம்
விசும்பையும் துளையிட்டு
விண்மகளை அழவைத்தோம்
விண்மகளின் வேதனையை
வேரறுக்க ஆசைப்பட்டேன் !
-பாரியூர் தமிழ்க்கிளவி