வண்ண வஞ்சிப்பா

புகழ்பெற்றது திசையெட்டிலும்
ழகரத்துட னெழிலுற்றது
வளமிக்கது நிகரற்றது
தெளிவைத்தரு மறிவைத்தரும்

அமுதொத்தது

நிறைவைத் தருமிப் புவியிற்
செறிவைத் தருமற் புதமுத் தமிழே!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Feb-19, 12:31 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 34

மேலே