கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - மூதுரை 24

’ர்’ ஆசிடையிட்ட இருவிகற்ப நேரிசை வெண்பா

நற்றா மரைக்கயத்தில் நல்அன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூ’ர்’க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம். 24 - மூதுரை

பொருளுரை:

நல்ல தாமரை மலர்கள் உள்ள குளத்தில் நல்ல அன்னப் பறவை சேர்வது போல நல்ல கல்வியறிவு உடையவர்களைக் கல்வி கற்றவர்களே விரும்பிச் சேர்வர்.

ஆனால் பழமையான சுடுகாட்டில் உள்ள பிணத்தையே காக்கை விரும்பும்.

அதுபோல, கல்வியறிவு இல்லாத மூடரை மூடரே விரும்புவர்.

கருத்து:

கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்புச் செய்வர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-19, 5:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7184

மேலே