தெளிந்த நீரோடை
களை கூட்டுதே அழகில்
அவன் நினைவில் அவள் அழகு,
அழகில் நிஜமாக அவள் இல்லை
ஆனால் அவன் பார்க்கும்போது
அவளில் அழகு சொட்டுதே .
காதலுக்கு நல்ல பண்பு ஒழுக்கம் வேண்டும்
அதுதான் அவளிடம் நிறைய உண்டு
பண்பில் அவளொரு நிறைகுடம்
ஒழுக்கம் அவள் நடை உடை பேச்சுக்களில் ,
வேறென்ன வேண்டும் இதைவிட அழகு ,
அவன் நினைவுகளில் ,கனவுகளில்
அவளொரு சீதையோ / என்ற கேள்வி அவனிடம்.
அவன் மனதில் சீதையாகி அவள் ,
இனி ஒருபோதும் அவள் வேறு நான் வேறு இல்லை
அவன் உள்ளமெங்கும் உலவுகின்றாள் காதலின் சாட்சியாய்
அவளின் அழகு மென்மெலும் மெருகேறுகிறது
குலமகளாய் குடியமர்ந்தாள் அவன் உள்ளத்தில்
அன்பில் பண்பில் ஒழுக்கத்தில் இவனும்
சளைத்தவனில்லை ,
இருவர் மனமும் தெளிந்த நீரோடை போல்
காதல் எனும் நதியில் .....