கதிரியக்கப் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் எலுமிச்சம்பழம்
அணுகுண்டால் விளையும் அபாயத்தைக்கூடத் தடுக்குமாம் இந்தச் சாதாரண எலுமிச்சம் பழம்.
சாதாரண எலுமிச்சம் பழம்-பற்களைக் கூசச் செய்யும் புளிப்பான இந்தப் பழம் எத்தனை எத்தனை காரியங்களுக்கு உபயோகப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமோ?
புற்றுநோய் வந்தவர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சø செய்வதால் கெடுதி உண்டாகக்கூடும். அதைத்தடுக்க இந்தப் பழம் உதவுகிறது. லெமன் மெரிங்கு என்ற இனிப்பான பணியாரம் செய்யப் பயன்படுகிறது. உருக்கைக் கடினமாக்க உபயோகப்படுகிறது. காயமுற்றவரின் அதிகமாகாமல் தடுக்கப் பயன்படுகிறது. உருக்கைக் கடினமாக்க உபயோகப்படுகிறது. காயமுற்றவரின் ரத்தப்பெருக்கு அதிகமாகாமல் தடுக்கப் பயன்படுகிறது. சாதராணக் காகிதப் பயன்படுகிறது. சாதாரணக் காகிதப் பையில் இந்தப் பழச்சாற்றைச் தடவி விட்டால் அதில் கிரீஸ் புகாது. பெட்ரோலைக் கூட ஊற்றி வைக்கலாம்.
எலுமிச்சம் பழச்சாற்றால், மசிக்க கறை மறையும். இந்தச் சாற்றை மீன் ’மது தெளித்து ஐஸ்பெட்டியில் வைத்தால் அது பல நாள் வரையில் கூட சுவிச்ச வாடை வீசாதிருக்கும். வாழை,ஆப்பிள் போன்ற பழங்களைக் காற்றுப்படும்படி வைத்தால் அவை பொதுவாக் கறுத்துப் போகும். ஆனால் அவற்றின் மீது எலுமிச்சம் பழம் சாற்றைத் தடவி அப்படி வைத்தால் இந்த மாதிரி அவை கறுப்பதில்லை. எலுமிச்சம் பழச்சாறு சில சமயம் ரத்தத்துக்குப் பதிலாகக்கூட உபயோகப்படுகிறது. எலுமிச்சம் பழத்துக்கும் அதிலிருந்து கிடைக்கும் உபபொருள்களுக்கும் நாம் நினைத்தேயிராத எத்தனை எத்தனையோ உபயோகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் இங்கே சொல்லுவதென்றால் சாத்தியமில்லை. முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
உபயோகமற்றது என்று குப்பைத் தொட்டில் எறிகிறோமே, அந்த எலுமிச்சம் பழத்தோழில் ஒரு சத்து இருக்கிறது. அந்தச் சத்துக்கு வருங்காலத்தில் பெரிய உபயோகம் ஒன்று காத்திருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவில் எலிகள் மீது அந்தச் சத்தை பரீட்சித்துப் பார்த்தில் இந்த விஷயம் தெரிந்து. அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு இவை வெடித்தால் ஏற்படும் கதிரியக்கம் நம்øம் பாதிக்காமல் தடுக்கக்கூடியது. அந்தச் சத்து பயோஃபளேவின் என்று அந்தச் சத்துக்குப் பெயர் அதை எலுமிச்சம் பழத்தோலியிருந்து இறக்கி எலிகளுக்கு உணவாகக் கொடுத்தார்கள்பிறகு. சாதாரணமாக உயிருக்கே அபாயமான அளவு கதிரியக்கத்தை அந்த எலிகள் மீது செலுத்திப் பார்த்தார்கள் எலிகளுக்கு தீங்கு உண்டாகவில்ø.
எலுமிச்சம் பழத் தோலில் உள்ள இந்த சத்துக்குத் கதிரியக்கத்தீங்குகளை தடுக்கும் ஆற்றல் உண்டு என்பது முதலில் டாக்டர்களுக்கு எப்போது தெரிந்தது?
புற்றுநோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சை செய்யும்போதுதான் தெரிந்தது பயோஃளேவின் என்ற இந்தச் சத்தைக் கலவை செய்து தயாரித்த மருந்துகளை அந்த நோயாளிகளுக்கு கொடுத்துவிட்டுப் பிறகு எக்ஸ்ரே என்ற கதிர்களை அவர்கள் மீது எவ்வளவு அதிகமாகச் செலுத்தினாலும் நோயாளிகள் தாங்கிக் கொண்டதை டாக்டர்கள் கண்டார்கள். அணுகுண்டு வெடிப்பதால் உண்டாகும் கதிர் இயக்கமும், எக்ஸ்ரேவின் கதிரியக்கம் போன்றதுதான். எனவே எலுமிச்சம் பழத்தோல் சத்தால் புற்றுநோய்க்காரர்களைப் போலவே சாதாரண ஜனங்களும் அதிக அளவு கதிரியக்கத்தைத் தாங்கிக் கொள்வார்கள் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
வெள்ளைத்துணிகளிலும் லினன் என்ற சணல் துணிகளிலும் ஏற்படும் பழக்கறைகளையும், துருக்கறைகளையும் போக்கடிக்க எலுமிச்சம் பழ ரசத்தில் உப்பை கரைத்து தேய்த்து நீரில் அலசினால் அந்தக் கறைகள் நீங்கிவிடும் என்பது அநேகமாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அலுமியைப் பாத்திரங்களைப் பளப்பளப்பாய்த் தேய்க்க இந்த ரசத்துக்கு இணையான பொருள் வேறு இல்லை. கிழக்கே பர்மா, நாட்டில்தான் முதல்முதல் எலுமிச்சை பயிராயிற்று என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள்.
நாணூறு வருஷங்களுக்கு முன்புதான் எலுமிச்சம் பழம் இங்கிலாந்து சென்றது. ஆயிலும் இத்தாலியில் 1600 வருடங்களுக்கு முன்பே அது தெரிந்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நாலாயிரம் வருடங்களுக்கு முன்பே எலுமிச்சை புழங்கிருக்கிறது. அங்கே புதைபொருட்களைத் தோண்டிப் பார்த்தில் அவ்வளவு பழமையான எலுமிச்சப்பழ விதைகள் கிடைத்திருக்கின்றன.
எலுமிச்சம் பழத்தை புதிய உலகத்தில் அதாவது அமெரிக்காவில் நுழைத்தவர் கிரிஸ்டாஃபர் கொலம்பஸ்தான் என்கிறார்கள். அட்லடாண்டிக் சமுத்திரத்தில் கப்பல் பிராயணம் செய்து கொண்டே போகும்போது கானாரி திவில் எலுமிச்சம் பழ விதைகள் கிடைத்தனவாம். அவற்றை கொண்டு போய் அமெரிக்காவில் அவர் நட்டாராம். எலுமிச்சம் பழத்தோலில் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் எண்ணெய் இருக்கிறது. ஐம்பது அல்லது அறுபது காலன் தண்ணீர் இந்த எண்ணெயில் சில சொட்டுவிட்டால் போதும் அவ்வளவு தண்ணீரும் கமகம என்று வாசனை வீசும். இந்த எலுமிச்சை எண்ணெய் எஸென்சை பல வாசனைத் தைலசங்களுக்கு சேர்க்கின்றார்கள்.
காய்ச்சல், தொண்டைப் புண், டான்சில், பருப்பது. வாதம், வீக்கம், ஜலதோஷம். வறட்டுச் சொறி மூட்டு வலி ஆகிய நோய்களுக்கு வீட்டுச் சிகிச்சையாக எலுமிச்சம் பழத்தை ஆதி காலத்திலிருந்தே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் மிகச் சமீப காலத்திலேயே இதை ஆராயச் தொடங்கியிருக்கிறார்கள்.
பழங்களில் பெக்டின் என்ற ஒரு சத்து உண்டு. குழம்பாயிருக்கும் ஜெல்லியைக் கெட்டியாக்கி ஜாம் ஆக உறையச் செய்வது அது. எலுமிச்சம்பழத்தில் உள்ள லெமன் பெக்டின் என்ற சத்தைக் காயத்தில் தடவினால் ரத்தம் உறøந்து. பெருக்கம் வெகுசீக்கரம் தடைபடும் என்பதை நவீன ஆராய்ச்சியில் கண்டார்கள், சென்ற மகாயுத்தில் ஜெர்மன் ஸோஜர்கள்தான் முதன்முதலில் இதை உபயோகித்தார்கள், ஜெர்மன் அரசாங்கத்தார் இதை அந்த ஸோல்ஜர்களுக்கு சப்ளை செய்திருந்தார்கள்.
இதன் பிறகு அமெரிக்க டாக்டர்கள் இன்னொரு விஷயம் கண்டுபிடித்தார்கள். இந்த லெமன் பெக்டின் சத்தைக் கொண்டு தயாரித்த கரைசல் (ஸொல்யூசன்) ரத்தக்குழாய்களுக்குள்ளே சென்றால் ரத்தத்துக்குப் பதிலாகவ ஓடக்கூடிய சக்தி வாய்ந்தது என்று அவர்கள் கண்டார்கள். ஹேமோஃபிலியா என்ற நோய் உள்ள சிலர் உண்டு. அவர்களுடைய உடம்பில் மிகச்சிறு காயம் பட்டாலும் போதும். ஏராளமாய் ரத்தம் பெருகி அவர்கள் எளிதில் மாண்டுவிடுவார்கள். இப்பபடிப்பட்டவர்களைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ரத்தபேதி(டிசண்டரி) கிராணி (டயரி) போன்ற நோய்களுக்குச் சிகிச்சை செய்யவும், எலுமிச்சம் பழத்திலிருந்து மருந்துகள் தயாரித்திருக்கிறார்கள். எலுமிச்சம் பழத்திலிருந்து இறக்கிய சிட்ரிக் ஆசிட் என்ற புளிச்சத்து, லெமனேட் போன்ற பானங்கள் செய்யப்படுகிறது. பேதி மருந்தாக உதவுகிறது. சமையலுக்கும் வறுவலுக்கும் உபயோகமாகிறது.
லெமன் பெக்டேட் என்ற எலுமிச்சம் பழ உப்பை, பூமியிலிருந்து எண்ணெய் எடுப்பவர்கள் கூட உபயோகப்படுத்துகிறார்கள். எண்ணெய்க்காகப் பூமியில் தொளைபோடும்பாது அதில் இந்த உப்பைப் போட்டால் இது கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்துடன் மோதுவதால் எண்ணெய் சரளமாக வர வழி ஏற்படுகிறது.
கையை மிருதுவாக்கிக் கொள்ள எலுமிச்சம் பழச் சாற்றைச் கையிலே தடவிக் கொள்பவர் உண்டு. ஆனால், இதே எலுமிச்சம் பழத்திலிருந்து எடுக்கும் உபபொருள் ஒன்று, இரும்பைக் கடினப்படுத்தவும் உபயோகமாகிறது என்று அவர்களில் எத்தனை பேருக்கு தெரியுமா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
(மஞ்சரி - 1958, ஏப்ரல் இதழில் வெளிவந்த கட்டுரை இது. )
-
கீத் வார்னர்.