பெருஞ்சோதனை செய்து

பெரிய வாசல் கொண்டவன்
அரிய கண்ணை புருவ மத்தியில் கொண்டவன்
சிறிய உடையை இடையில் பூண்டவன்
அடியாரை அணுதோறும் ஆட்சி செய்பவன்
பெருஞ்சோதனை செய்து பேரு பெற்றவன்
பிறப்பிக்கும் எவ்வுயிரையும் பெருமை செய்பவன்
மண்ணில் எண்ணிலடங்கா வீடு கொண்டவன்
வினையின் ஊடே என்றும் ஊர்ந்து செல்பவன்
பண்ணிலும் பாட்டிலும் பிணைந்து உள்ளவன்
அவன் தாளை தொழுது அனைத்தும் செய்தால்
அனைத்தும் வெற்றியே அது அவனின் நீட்சியே.
-- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Feb-19, 9:21 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 54

மேலே