பிரிதிவி ஏவுகனை
ஆயினும் நாங்கள் ஆர்ப்பரிக்கும் வீரம் நிறைந்தவர்கள்
900 ஆண்டுக்கு முன்பு தோல்வியில் மண்டியிட்டு கும்பிட்ட கோரியை துவம்சம் செய்த பிரித்திவியை
பெற்றெடுத்து பால் புகட்டி வளர்த்தது எம்தேசம்டா
தோற்று ஓடிய கோரியின் வஞ்சகத்திற்கு இறையான
ஜெயச்சந்திரனின் துரோகத்தால் 2ம் முறை போரில்
குரூரமாய் வென்ற கோரியின் கைகளால்
குருடனாக்கப்பட்ட பிரித்திவியை பகடை காயாய்
பலர் முன்னிலையில் பரிகாசம் செய்தவன் கோரியடா
பல காலம் இப்படி செல்ல பழுத்தது ஒரு காலம்
போதையில் கோரி வில்லம்பை பிரித்திவியிடம் வழங்க
ஒலி வரும் இடம் உன் இலக்கு என விளக்கும் போது
ஓரம்பு விட்டு கோரியின் உயிரை எடுத்தான் பிரித்திவி
கோரி ஆட்களால் கொலை செய்யப்பட்டான் பிரித்திவி
இவ்வுலகை நீங்கும் போது வயது 26
கோரியை கொன்றவன் நினைவே பிரிதிவி ஏவுகனை
இனி அது இந்தியருக்கு கேடையமாகும்.
-- - நன்னாடன்