நன்னடத்தையும் நல்ல நட்பும்

நன் நடத்தையே ஆத்மபூர்வமாய்
வாழ வழிகாட்டும் வாழவைக்கும்
கல்மிஷம் ஏதுமில்லா இதயம்
குழந்தையின் இதயம்போல் அப்படி
இதயமிருந்தால் அதுவே கடவுள்
வாழும் கோயில்………..
நன்நடத்தையே இதையெல்லாம்
நமக்கு தந்து கொடுக்கும்
நன்னடத்தைக்கு நல்லோர் சகவாசம்
வேண்டும் அதுவே உள்ளொளி பெருக்கும்
நல்லோர் கூட்டு நல்ல நண்பன் அடைய
துணையாய் நிற்கும் நண்பன் கிடைக்க
நல்ல நட்பு பயக்கும், நல்ல நண்பன்
தவறுகள் நீ செய்யின் தட்டிக்கேட்பான்
உன் வெற்றிகளில் உன் பெற்றோர் காணும்
இன்பம் காண்பான் உன்னால் தன்
தவறுகளையும் திருத்திக்கொள்ள
தயங்கிட மாட்டான் தன்னையே
நண்பன் உன் நன்மைக்கு தந்திட ஒருபோதும்
தயங்கிட மாட்டான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Feb-19, 1:57 pm)
பார்வை : 603

மேலே