அரைமயக்க நிலையில் நான்

வித்தாக செடியாக விழுது விடும் மரமாக
கொத்தாக குலையாக கொழுந்து விடும் கொடியாக
நெற்றாக நிறைவாக நீண்டு வளர்ந்த குன்றாக
கம்பும் கேழ்வரகும் கலந்து செய்த களியாக
காருவாடுவை சுட்டெடுத்த கருவேலன் நெருப்பாக
கருத்துக்களை பறிமாற அமரும் ஆலமர நிழலாக
அந்தி சாயும் நேரத்திலே பேடைத் தேடும் குயிலாக
ஓடை ஓரக்காற்று என்னை போதை கொள்ள செய்யுதடி
ஆசையென்ன தேவையென்ன அறிந்து கொள்ள முடியிலையே
அரைமயக்க நிலையில் நான் வாழ்வதைப் போல் உள்ளதடி
காதலில்லை காமம் இல்லை கண்டபடி ஆசையில்லை
கட்டுபாட்டில் மனமுமில்லை எடுத்துச் சொல்ல ஆளு மில்லை.
-- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Feb-19, 8:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 43

மேலே