பயத்தை உன்னுள் புதைத்து

உன்னுள் உயரும் எண்ணம் ஒரு நாள்
உன்னை உயரத்திற்கு அழைக்கும்
பயத்தை உன்னுள் புதைத்து முன்னேறும்
பாதையில் உன்னை செலுத்து
எதையும் அறிவால் அணுகும் போது
எல்லாம் அநாயசமான இலக்கு
நீயும் நீண்ட வேராய் மாறு
நீர் எங்கிருக்கோ தேடு
நீண்ட மூச்சு முடியும் வரைக்கும்
முயன்று முயன்று ஓடித்தேடு
இலக்கை ஒன்றை வைத்து; நிறைவு
காணும் வரைக்கும் சுழலு.
-- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Feb-19, 7:50 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 242

மேலே