அர்த்தம் விளங்கினால்
ஆயிரம் கவிதைகள் படித்த போதுதான்
அர்த்தம் விளங்கியது எனக்கு
என் கவிதைகள் அர்த்தமற்றவை என்று
ஆயிரம் பூக்களை ரசித்த போதுதான்
அர்த்தம் விளங்கியது
பூக்களுக்கும் கற்பு உண்டு என்று
ஆயிரம் மொழிகளை கண்டபோதுதான்
அர்த்தம் விளங்கியது
தமிழ் அருமை என்னவென்று
ஆயிரம் ஆயிரம் கற்க வேண்டும்
என்றெண்ணிய போதுதான்
அர்த்தம் விளங்கியது
மனித ஆயுள் போதாது என்று