எதிர்பார்ப்பு

ஆணா? பெண்ணா? என்ற
எதிர்பார்பில்லை அன்னைக்கு,
கருவிலே கண்மூடித்தனமான
அன்பை அள்ளிக்கொடுப்பாள்.
தன்வலி பொருட்படுத்தாமல்
உனக்கு வழி கொடுப்பாள்
அளவில்லா ஆனந்தம் பொங்க
அள்ளி எடுப்பாள் உன்னை.
அம்மா என்ற வார்த்தை கேட்ட
அந்த நொடி தன்னை மறப்பாள்
ஆறடி நீளம் நீ நடந்தாலும்
ஆயிரம் முறை வர்ணிப்பாள்.
மின்னல்போல் நாட்கள் நகர
மிக வேகமாய் நீயும் வளர்ந்தாய்
மெல்ல திறந்தது எதிர்வீட்டு ஜன்னல்
மெல்லிய சலனம் உன் நெஞ்சில்
பசியறிந்து பால் ஊட்டிய தாய்
பருவம் அறிந்து நட்பை ஊட்டினால்
பாசம் என்னும் பயிறுக்கு
நேசம் என்னும் உரம் வைக்க,
மாற்று தாயென உன் மனைவி
மாலையுடன் மண அறையில்
மங்களம் பொங்கும் முகமும்
மௌனமான மொழியும்
அப்படியே உன் அன்னை
அச்சுவார்த்தது போல குணம்
அழகான அனுசரிப்பு எப்போதும்
அன்னை ஞாபகமாய்.
தன் கடமையை முடித்த தாய்
கடவுள் ஆனா நாள் முதல்
காண்பாய் உன் மகளை
தாயின் மறு உருவாய்.
மழலை பேசும் மகளின்
முகம் பார்த்து மௌனமாய்,
மனம் பேசும் தன்னை மறந்து
தாயின் பாச மொழியை.
எதிர்பார்ப்பில்லா உன் உள்ளம்
மெதுவாக உண்மை சொல்லும்
வயது என்பதை தாண்டும்
கைகள் கொஞ்சம் நடுங்கும்
கால்கள் மெல்ல தடுமாறும்
வார்த்தை உளறி வரும்
பார்வைக்கு திரை போடும்
கண்களில் நீருடன்
பக்கத்தில் அவள் இருந்தால்
பார்த்து கொள்வாள் என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
தலைக் காட்ட ஆரம்பிக்கிறது
எதிர்பார்ப்பு
அனுவிர்க்காக
அன்புடன் தேவி