வாசல்கள் தேடி

'அகவை' ஒன்று கூடிட
தொலைந்து போன நாட்கள்
'தொலையாத நினைவுகளுடன்...!'

நரம்புகளில் வழிந்தோடிய
"மதுரசம்" போல்
'மாதுவாகிய' அவளின் நினைவுகள்....!

நித்தம் கடந்த சந்திப்புக்களில்
நித்திரை தொலைத்த...
"காலங்கள்..."

சந்திப்புக்களுக்காக...
புறக்கணிக்கப்பட்ட
'பணியிடங்கள்'

புறக்கணிக்கப்பட்டது...
'பணியிடங்களா...?' - அவளின்
வாழ்விலிருந்து நானும் தானே....!?

தொலைந்த பணியிடங்கள்
கம்பீரமாய் காட்சி தர
ஏக்கப் பெருமூச்சுடன் நான்...
தொலையாத அவளின்
'நினைவுகளுடன்...'

புது வாழ்வில்
புது மலராய் 'அவள்'
வாடிய மலராய்
வாசல்கள் தேடி
என் பயணம்....
"பணி" வாசல்கள் தேடி...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (28-Feb-19, 8:50 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : vaasalgal thedi
பார்வை : 462

மேலே