சுயநலம்

சுயநலம் தீதென்று செல்பவர்கள் மத்தியிலே நான்
சுயநலக்காரன் என்று சொல்லுவதில் வெட்கம் இல்லை
சுயம்பாக இவ்வுலகில் வந்தவர்கள் யாரும் இல்லை சிலர்
வம்பாக சொல்பவர்கள் பொதுநலம் பெரிதென்று அவர்
வாழும் வையகத்தில் சுவாசிக்கும் காற்றே அவர்
சுயநலம் என்று ஆன பின்பு
சுயநலம் தீதென்று சொல்லி என்ன பயன்?
தாய், தந்தை சுயநலத்தால் சொந்தமென நீ பிறந்தாய்
தன் சுயநலம் இல்லை என்றால் சொல்லிக் கொள்ள யாரும் இல்லை
என் பெண்டு என் பிள்ளை என் வீடு
என்று நான் இருந்தால்தானே பின்
என் இனம் என் நாடு என் மக்கள்
என்று நான் இருத்தல் இயலும் எனவே

நெஞ்சில் நேர்படப் பேசுவதைச் சுயநலவாதி என்றால் அதில்
அஞ்சிட ஒன்றும் இல்லை ஆகட்டும் நன்று என்பேன்

சுயநலம் இருந்தால்தான் பொதுநலம் தானே வரும்
சுயநலம் இல்லா மனிதன் சுருதி இல்லா இசை போல
சுயநலம் இல்லை என்றால் சாதனை ஏதும் இல்லை
சுயத்தை அறிந்தால்தான் சுவைபட வாழ்ந்திடலாம்
சுயநலம் இல்லை என்றால் சூனியத்தில் ஏதும் இல்லை

பொது நலம், பொது நலம் என்று பொய்யுரைப்போர் எல்லோரம்
பொது நலம் செய்ய யாரும் பிறப்பிலே வருவதில்லை
சுயநலம் என்னும் ஆணி வேர் இல்லாமல் என்றும்
பொது நலம் என்னும் புர வேர் தழைக்காது எனவே நான்
சுயநலகாரன் என்று சொல்வதில் பெருமை உண்டு

எழுதியவர் : Mohamed Mohiddin (28-Feb-19, 9:46 pm)
சேர்த்தது : முகமது முகையதீன்
Tanglish : suyanalam
பார்வை : 2893

மேலே