தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை
-------

தாட் பூட் தஞ்சாவூர் எல்லாம் அம்மாவிடம் தான். பெரிய கம்பனியில்
சேர்ந்து பிறகு வெள்ளை 'காக்கா' பறக்கிறது என்றாலும் வேகமாக ஆட்டினான் தலையை.

உங்கம்மா அப்படி, உங்கப்பா இப்படி, அப்படியா?
அடிமையாய் மனைவியிடம் தலையாட்டினான்.

அவன் சந்தித்த பல மனிதர்கள் உண்மையாய் பொய் சொன்ன போதிலும்
சரி, சரி என்று தலையாட்டினான்.

உங்க உடம்புக்கு
அது இருக்கு , இது இருக்கு
மருத்துவர் சொன்னபோது
நம்பாமல் சந்தேத்துடன் தலையாட்டினான்.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடப்படும்! மாற்றத்துக்காக
தலையாட்டினான் .

என் உயிரினும் மேலான உடன் பிறப்பே!
நம்பி
தலையாட்டினான்.

ரத்தத்தின் ரத்தமே!
வேகமாக தலையாட்டினான்.

மக்களால் நான், மக்களுக்காக நான்!
எழுச்சியுடன்
தலையாட்டினான்.

பதினைந்து லட்சம் வங்கியில்
போடப்படும்
பேராசையால் தலையாட்டினான்.

முத்தியோர் இல்லத்தில் சேர்த்த போதும் சம்மதம் தெரிவித்து பொறுமையுடன் தலையாட்டினான்.

இப்படி தஞ்சாவூர் பொம்மையைாக தலையாட்டி
இவன் கண்டது என்ன என்று கேட்டால்?
பழக்க தோஷத்தில் அதற்கும் தலையாட்டினான்.
- பாலு.

- பாலு.

எழுதியவர் : பாலு (28-Feb-19, 8:49 pm)
சேர்த்தது : balu
Tanglish : thalaiyaatti pommai
பார்வை : 98

மேலே