வாசல்

காதலுக்கு வாசல் கண்கள்
கவிதைக்கு வாசல் கற்பனை
மோதலுக்கு வாசல் முரண்கள்
முக்திக்கு வாசல் மௌனம்

அருவிக்கு வாசல் சுனைகள்
அன்புக்கு வாசல் கருணை
குருவிற்கு வாசல் தந்தை
இருவருக்கும் வாசல் தாய்தான்

அலைகளின் வாசல் கரைகள்
அமைதியின் வாசல் தனிமை
கலைகளின் வாசல் ரசனை
கைகளின் வாசல் விரல்கள்

மாற்றங்களின் வாசல் சிந்தனை
மரணத்தின் வாசல் பிறப்பு
ஏற்றங்களின் வாசல் முயற்சி
இயக்கத்தின் வாசல் எண்ணம்

உண்மையின் வாசல் அஞ்சாமை
உலகத்தின் வாசல் சூன்யம்
பன்மையின் வாசல் ஒருமை
பழமையின் வாசல் பிடிவாதம்.

எழுதியவர் : முத்து நாடன் (1-Sep-11, 11:06 am)
சேர்த்தது : muthunaadan
Tanglish : vaasal
பார்வை : 283

மேலே