சிறுவனும் பசுங்கிளியும்

கொவ்வம் பழம் தேடி
கொண்டு வர அலைந்தேன்
கொண்டு வந்தேன்
உன் இனிய கொவ்வம் பழம்

அதை நீ உண்ணும் அழகில்
நீ பசியாறும் போதில்
உன்னுதட்டை ரசிக்கிறேன் ,
உன் உதட்டில் சிவப்பு சாயம்
உன்னழகை மெருகேற்றும்

பசுங்கிளியே உன்னழகில்
மயங்காத மன்னரில்லை,
,அரண்மனையில் கிளியுண்டு
ஆசையுடன் வளர்த்தெடுக்க
அத்தனை பேர் அங்குண்டு

பச்சிளம் குழந்தைக்கும்
நின் பேச்சு சொக்கவைக்கும்
உன் பேச்சில் ஓர் மயக்கம்
பெற்றி... பெற்றி..பெட்ரம்மா
கிளியே பசுங்கிளியே பச்சைபசுங்கிளியே

நான் சொல்லும் சொல்லை
மீண்டும் மீண்டும் உன் வாயால்
கேட்பதற்கு ஆசையுண்டு ,
சொல்லடி என் கிளியே பசுங்கிளியே
கோபம் வந்தால் என் விரலைக்
கொத்திவிடு செவ்விதழால் ,

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Mar-19, 6:02 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 57

மேலே