விசும்பல்கள்
மௌன இரவுகளின் நிசப்தத்தில்
அவளின் விசும்பல்கள்
தொலைதூர அவலக்குரலின் ஓசையாக
சிறகு கொண்டு பறந்திட
சிந்தனை கொண்ட அவள்
சிறகொடிந்த பறவையாக
பால்ய திருமணமெனும்
சமூக சாக்கடையில்
தவறி விழுந்த மொட்டு அவள்
சாராய நெடிகொண்ட இரவுகள்
இரத்தத்தை உறிஞ்சியபடி
விடியாத இரவுகளில்
தொலையாத கனவுகளுடன்
நாளைய நிஜத்தினை எதிர்நோக்கி
மௌன விசும்பல்களுடன்.