அழகிய காதல்

அவளை நான் சந்திக்கவரும்போதெல்லாம்
தோழிகள் அவளுடனே
ஒவ்வொருவர் தோளில் ஒவ்வொருவர் கரங்களும் ,
என் கண்னே பட்டுவிடும் போல்
என்னே /அழகு புறாக்கூட்டம்போல் ......
இதில் எனது புறா எங்கே என்று எப்படி /
இவ்வாறு ஒவ்வொரு நாள் மாலையிலும்
கல்லூரி முடியும் நேரம் கழுத்து வலிக்க காத்து நிற்பான்
அன்று மட்டும் இருபுறாக்கள் அருகருகே
இவள் மட்டும் நடுவினிலே ஒயிலாக
அவள் நடுவினில் வருவது தான் தோழிகளுக்கு சிறப்பு ,
அப்படி அவளும் அழகுதான்.
இதனால் தான் இவளுக்கு அவர்கள் காவலோ/
ஒருநாள் அவள் வரும்போது எதேச்சையாய்
நிமிர்ந்து என்னை பார்த்து விட்டாள்
உடனே அடியே ....அங்கு ஒருவன் பார்த்தாயா/
அவன்தான் நான் பார்க்கின்ற ஆளு
இது அவனுக்கு தெரியாது என்று சொன்னாள் .
அவன் இவளை பார்ப்பது இவளுக்கும் தெரியாது
ஆனால் இருவர் மனதிற்குள் காதல் உணர்கின்றனர்,
இருவர் உள்ளமும் காதலில் சங்கமித்துவிட்டது, ....

எழுதியவர் : பாத்திமாமலர் (3-Mar-19, 9:43 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : alakiya kaadhal
பார்வை : 295

மேலே