விவசாயி

காய்ந்த வயிறும்
தேய்ந்த செருப்பும்
நெய்த நூலிலும் தைத்ததே
அதிகமான ஆடையும்
வேய்ந்தும் ஒழுகும்
வீட்டின் கூரையுமன்றி
விதைத்து விளைந்தறுத்தும்
வேறென்ன கண்டானிவன்?
✍️ தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (4-Mar-19, 3:14 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
Tanglish : vivasaayi
பார்வை : 5221

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே