யுகங்கள் கடந்தும் காத்திருக்கும்
பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து
பூக்கூடை நிரம்பியது
தொடுத்தால் சூடினால்
பூக்கள் வாழ்வு பெறும் !
இல்லையேல் பூக்கூடையும்
குப்பையே !
பாக்கள் உதிர்ந்து உதிர்ந்து
நிறையும் கவிக்கூடை
பார்த்தால் படித்தால்
வாழ்வு பெறும்
பார்க்கா விட்டாலும் படிக்காவிட்டாலும்
வாடுவதில்லை கவிப்பூக்கள்
யுகங்கள் கடந்தும் காத்திருக்கும்
கவிதை மலர்கள் !