நான் வளர்த்த, என்னை வளர்த்த தென்னை மரன்
நான் வளர்த்த, என்னை வளர்த்த தென்னை மரன்!
நான் வளர்த்த
எனை வளர்த்த
தென்னை மரன் .
நான் 'பெற்று' வைத்ததாலே
நான் வளர்த்தேன்
நான் வைத்தாலே
எனை நீ வளர்த்தாய்.
பெற்றவர்கள்
வைத்தவர்கள்
வளர்த்திடுவார்
ஆனால் நாம் இங்கே
உடனிருந்து
பரஸ்பரம்
வளர்த்திட்டோம்
வளந்திட்டோம்!
எனது கல்லூரி கல்விக்கு
வருடமிருமுறை உதவித் தொகை
அளித்தவன் நீ !
தங்கையின்
தலைப்பிரசவ
அவரச அறுவை சிகிச்சை
மருத்துவ காப்பீடு நீ!
என் ஊருக்கு
எப்போதும் வருகின்ற
வருவாய் அலுவலருக்கும்
எப்போதாவது
வருகின்ற
ஆட்சி தலைவருக்கும்
அவ்வப்போது
வாக்குறுதியாய்
வருகின்ற
அரசியல் வாதிகளுக்கும்
நண்ணிரும்
தேனீருமாய்
எங்கள்
தாகம்
தனித்தவனே !
காய் கொடுத்து
பழமாகி இனித்தவனே .
முதுமைக்கும்
குழந்தைக்கும்
இளநீராய்
இளமையளித்தவனே.
நகருக்கு
மாநகருக்கு
மாமனை
அண்ணனை
அக்காவை
நாண்பனை
பார்க்க விழைகின்றபோது
நீயும்
உடனிருந்து வாழையும்தானே
உடன்வருவீர்கள் .
மட்டையாகி
கீற்றாகி
நாராகி
பின்
கூரையாகி
எங்கள்
உணவு
உடை
இடமாகி
எங்கள் ஊணாகிப்போனவனே.
நான் பிறந்தபோது
எங்கள் ஊர் பெருவிழாவின்போது
எங்கள் ஊர் புதிதாய்
பள்ளிக்கூடம் கண்டபோது
தோரணமாய்
நின்ற நீ !
என் தந்தை
நான் இழந்தபோது
கீற்றாகி பாடையில்
தூக்கிச்சென்றாயே!
மூன்று மாதம்
மண்ணிலிருந்து
முலைத்திட்ட நீ !
மூன்று மணி
முழுமையாய் போராடி
வீழ்ந்திட்டாய் நீ !
வீழும்போதும்
உரைத்திட்டாய் நீ !
சாதாரணமாய் விழாதே!
எதிர்ப்பது
சுற்றியட்டிக்கும்
சூறாவளிப் புயலாய்யிருந்தாலும்
சுற்று கடைசிவரை
சுழன்று போராடு என்றே!
நான் வளர்த்த
எனை வளர்த்த
தென்னை மரன் .