இப்படி பரிமாறு

சுருள் முடி சிங்காரி போல்
முடியும் இலை அறுத்து
இடப்பக்கம் இலை முடிவு
வருமாறு தான் விரித்து
கைக்குழி நீரெடுத்து
தூறல் போல் மேல் தெளித்து
இளம்பச்சை இலை மேலே
இருக்கும் நீர் வழித்து
இனிப்பான பூந்தி கொஞ்சம்
இலை முதலின் ஓரம் வச்சு
பக்குவமாய் சுடுசோறு
பாசமுடன் பாதி தள்ளி
போதுமென்று சொல்லும் முன்னே
போக வேண்டும் மற்ற இலை
இருக்க வேண்டும் இலையோரம்
இரு விரல்பிடி உப்பு கொஞ்சம்
பாதி இலை மேல்பக்கம்
கூட்டு கொஞ்சம் பொரியல் சொச்சம்
விளக்கி வச்ச வென்செம்பில்
விரல் படா நீர் வைத்து
வேகமாய் வெங்காய
சாம்பாரை எடுத்து வந்து
இலை தாண்டா குழம்பு கொஞ்சம்
சோறு நடுவே ஊற்றவேண்டும்
வேறென்ன வேணுமுங்க
என்றே தான் கேட்க வேண்டும்.

(சோறு சமைப்பது பெரிதல்ல அதை பரிமாறும் முறை அறிந்து இருக்கவேண்டும்)

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (5-Mar-19, 5:32 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 64

மேலே