ஆண்டு அனுபவித்து

பூமிக்கு வேலியிட்டு
பாதுகாத்து

சொந்தம் கொண்டாடி

பட்டா வாங்கி

பத்திரம் பதிந்து

சந்திர சூரியர்
உள்ளவரை

ஆண்டு அனுபவிக்க
உரிமை

கொடுத்தவனும்
காணவில்லை

பெற்றவனும்
காணவில்லை

சந்திர சூரியர்
மட்டும்

பார்த்துச் செல்கின்றனர்
நாள்தவறாது

எழுதியவர் : நா.சேகர் (9-Mar-19, 9:32 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaanavillai
பார்வை : 376

மேலே