பெண்களே கவனம்

நினைவிலும்
நீங்கா
நிமிடங்களோடும்

கனவிலும்
தீண்டா
கண்ணியத்தோடும்

அலைக்கற்றை
இல்லா
காலத்தில்
இருந்த
விழிகளின்
ஒளிக்கற்றை
காதலல்ல
பெண்ணே -- இன்று

மாமிசத்தை தேடும்
மனிதர்கள்
மனதில்

உதிரம் தரும்
இதயமே
ஆனாலும்

கபடமில்லா
காதலை தேடுவது
பிழையே.....

                                  

எழுதியவர் : உலையூர் தயா (10-Mar-19, 1:56 am)
சேர்த்தது : தயாளன்
Tanglish : pengalae kavanam
பார்வை : 82

மேலே