இன்றையப்பெண்
ஸ்ரீராமனைப்போல் உடலால்
உள்ளத்தால், மனதால் கண்ணியமாய்
ஆனவன் இருப்பானாயின் அவனை
நாடிவந்து காதலனாய் கணவனாய்
ஏற்பாள் சீதாதேவியைப்போல் பெண்ணரசி
ஆணவன் ஆணவத்தால் மதம்கொண்டு
அந்த பத்துதலை இராவணைப்போல்
பெண்ணைத் துச்சமாய் நினைத்து
காமப்புணர்ச்சியோடு அழித்திட முனைந்தால்
இன்றையப்பெண் மீ டூ நாடுவாள் அவன் செயலை
தட்டிக்கேட்க அவள் கற்பிர்க்கே ஊறு நேரின்,
பெண்ணை இப்படி நடத்தும் இவ்வீனர்களும்
பெண்ணின் வயிற்றிலிருந்து உதித்தவர் அல்லவா
இவர்களுக்கு பெண்ணினது உறவினர்
யாரும் இல்லையா இவர்கள் செயலைக்
தட்டிக்கேட்க தண்டிக்க ……..
பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைய பெண்
சீறியெழ துடங்கிவிட்டாள் அவளும் களரி
முதலியவைக்கற்று வீராங்கனை யாகின்றாள்
ஜான்சி ராணிபோல் சக்தியாய் நாளை
இவள் வளம் வருவாள் சக்தியாய் வீணர்
தலையைக் கொய்திடவே பாரதியின்
கனவை நெனவாக்கும் சக்தியம்மனாய்
வாழ்க பெண்டிர் வளர்க தாய்க்குலம்