காம இச்சை
காம இச்சை கொண்டு
கயவன் உன்னை அழைத்தான்
தங்கையே என்று !!!
அவனை அறியாமல் நீயும்
அண்ணா என அழைத்தாயே
அன்பே !!!
அன்பே என்று அழைத்தான்
அவன் உன்னை அதை
காதல் எனவும் நம்பவைத்தான்
உன்னை !!! அதுமட்டுமா ?
அம்மா என அழைத்த அவனை
மகனாய் நினைத்த தாயிற்கும்
இந்நிலையே !!!
எங்கும் எதிலும் பெண்ணை
தாழ்த்தி பேசிவிட்டு
தற்பொழுது கூட கயவனுக்கு
முட்டுக் கொடுக்கும் மூடர்கள்
பலர் !!!
இப்புவியில் இருந்தால் என்ன?
உயிரிழந்தால் என்ன ?
இவள்
கீதாவின் மகள்.