இழிவான பிறப்புக்கள்

காதல் என்று கூறியே
பெண்ணை அழைக்கின்றாய் /
காயங்கள் கொடுத்து
மனதை வதைக்கின்றாய் /
காகிதமாகவே நினைத்துக்
கசக்குகின்றாய் /
காமப் பசி தீத்து முடிக்கின்றாய் /


கலங்கும் கண்ணீரையும்
கண்டுக்காமல் /
கலங்கப் படுத்தி சிரிக்கின்றாய் /
கயவனே உன் நெஞ்சம்
கல்லாய்ப் போனதோ?
கறையான் அரித்து
இதயமும் வீணாய்ப் போனதோ ?


கன்னியர்களை எண்ணி எண்ணிக்
கலங்கப் படுத்தி விட்டு /
கன்னியமாய் உலாவிய கள்வனே /
திருமதியெல்லாம் வெகுமதியில்லாத
பொருளாக மாற்றி விட்டு/
திமிரான பேச்சோடு
வீராப்பு நடை போட்ட வஞ்சகனே /


நெஞ்சம் பதைக்குதையா
நஞ்சை வாயில் தினித்து விடச்
சொல்லி என் ஆத்மாவும் குமுறுதையா /
கரிச்சிக் கொட்டுகின்றது உன்னை நாடு/
புலம்பலும் அலம்பலுமாய் துடித்து அழுகின்றது பல பெண் பிள்ளை வீடு/


துணைக் கரம் பிடிக்க தடை போட்டு
சாதி வெறிக் கொடி பிடிப்பான் /
மோகம் தலைக்கு அடித்தால்
அத்தனை சாதிப் பெண்ணையும் முகர்ந்தும் நுகர்ந்தும் முடிப்பான் /
எளிய சாதியும் இழிவான பிறப்பும்
இவனே என நாம் சொல்லி முடிப்போம் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Mar-19, 6:20 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 107

மேலே