பெண்ணே
தூரத்துப் பச்சையின் குளிர்மையில் மயங்கின்
ஓர்நொடியில் பேர்கெட வைக்குமுமை யழிக்கும்
இத்தனை காலமாய்ப் பெற்றுமை வளர்த்தவர்
அத்தனை சுலபமாய் விட்டி(ற்றி)டார் நும்தமை
நும்தமைக் காப்பதும் நும் கையிலேயே
நும்தமை அழிப்பதும் நும் கையிலேயே
பழமையோ, புதுமையோ எதனிலும் பெண்ணே
இளமையின் வேகம் கடந்துநீ யோசி!
உந்தன் பெண்மைக்கோர் அநீதி நேர்ந்தது
வெஞ்சினங் கொண்டெழு! வீழட்டுமுன் பகை!
நீதி கிடைத்திடல் வேண்டும்! அன்றேல்
நீசச் செயல்கள் தலைவிரித் தாடும்!
பாதிப் புனக் கென்ற ஞ்சாதே!
மோதி முகத்துமிழ்! முடியும், நீ வீறுகொள்!
சாக்கடை தன்னில் தவறியே வீழ்ந்தனை
சாவினை யென்றும் அணைக்கத் துணிந்திடேல்
ஊர்க்கடை நதியினில் மூழ்கி யுயிர்த்திடு!
போர்க்குணம் கொண்டெழு! போதுமின் வெல்குவை!
✍️ தமிழ்க்கிழவி.